தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்கள் 1,043 பேருக்கு இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர்

கல்லுாரி மாணவர்கள் 1,043 பேருக்கு இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர்

கல்லுாரி மாணவர்கள் 1,043 பேருக்கு இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர்


UPDATED : ஜன 30, 2026 02:11 PM

ADDED : ஜன 30, 2026 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2026 02:11 PM ADDED : ஜன 30, 2026 02:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், 1,043 பேருக்கு, ஆதிதிராவிடர் நலத்தறை அமைச்சர் மதிவேந்தன் இலவச லேப்டாப்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், தனியார் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா லேப்டாப்கள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.ஆர்.ஓ., சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்டத்தில் உள்ள 15 தனியர் கல்லுாரிகளைச் சேர்ந்த, 1,043 மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்டாப்களை வழங்கி பேசியதாவது:

மாணவ, மாணவியரின் கல்வி எவ்விதத்திலும் தடைபடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் தன்னார்வலர்களை வீட்டிற்கே அனுப்பி, இடைநிற்றலை தடுக்க இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில்தான் நடந்து வருகிறது.

கல்லுாரி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உலகம் உங்கள்கையில் என்ற திட்டத்தின் மூலம் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்தி, தேசிய அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் உயர் கல்வி படித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us