sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

5,204 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்

/

5,204 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்

5,204 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்

5,204 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்


UPDATED : பிப் 03, 2026 02:15 PM

ADDED : பிப் 03, 2026 02:17 PM

Google News

UPDATED : பிப் 03, 2026 02:15 PM ADDED : பிப் 03, 2026 02:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: “கரூர் மாவட்டத்தில் கல்லுாரி மாணவ, மாணவியர், 5,204 பேருக்கு விலையில்லா லேப்டாப், வழங்கப்பட்டுள்ளது,” என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பேசினார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், கல்லுாரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.

கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, மாணவ, மாணவியருக்கு லேப் டாப் வழங்கி பேசியதாவது:

கரூர் மாவட்டத்தில், 5,204 கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) ஒரு நாளில் மட்டும், 3,137 பேருக்கு வழங்கப்டுகிறது.

ஒரு வகுப்பில் படிக்கக்கூடிய, 50 பேரில், 20 பேரிடம் லேப்டாப் இருக்கிறது, 30 பேரிடம் இல்லை என்றால் ஏக்கம் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அளவிற்கு, அரசு திட்டங்கள் மூலமாக கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, அதற்காக என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம் மூலமாக, 12 லட்சம் மாணவ மாணவியர் மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகையை பெறக்கூடிய ஒரு மகத்தான திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, காலை உணவுத் திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு, அவர் பேசினர்.

தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், 15 பயனாளிகளுக்கு தலா, 15,000 ரூபாய் மானியத்தில் நடமாடும் காய்கறி வண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், அரசு மருத்துவக் கல்லுாரி டீன் (பொ) ராஜா, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், தோடக்கலை துறை துனை இயக்குனர் தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us