sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர்களுக்கு இணைய அறிவியல் தொழில்நுட்பம் கட்டாயம்; எழுத்தாளர் கபிலன் வலியுறுத்தல்

/

இளைஞர்களுக்கு இணைய அறிவியல் தொழில்நுட்பம் கட்டாயம்; எழுத்தாளர் கபிலன் வலியுறுத்தல்

இளைஞர்களுக்கு இணைய அறிவியல் தொழில்நுட்பம் கட்டாயம்; எழுத்தாளர் கபிலன் வலியுறுத்தல்

இளைஞர்களுக்கு இணைய அறிவியல் தொழில்நுட்பம் கட்டாயம்; எழுத்தாளர் கபிலன் வலியுறுத்தல்


UPDATED : பிப் 03, 2026 02:17 PM

ADDED : பிப் 03, 2026 02:19 PM

Google News

UPDATED : பிப் 03, 2026 02:17 PM ADDED : பிப் 03, 2026 02:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: “இன்றைய இளைஞர்கள் இணைய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஆளுமை செலுத்தினால் உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும்,” என, மதுரையில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து வலியுறுத்தினார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய 'ஆகோள் பெருவிழா' தலைப்பில் ஆகோள் பெட்டகம் நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள், பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பன் முன்னிலை வகித்தனர்.

கபிலன் பேசியதாவது:

இந்நாவல் தொடருக்காக 5 ஆண்டுகள் உழைத்துள்ளேன். நாம் என்ன உழைக்கிறோம் என்பதை விட, நம் உழைப்பு சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பது முக்கியம். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

இன்றைய இளைஞர்கள் சின்னச் சின்ன மயக்கங்களில் தொலைந்து விடாமல், மனதை கட்டுப்படுத்த வேண்டும். இணைய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டு ஆளுமை செலுத்தும் போது, உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும்.

இந்திய அரசியலைக் கூர்ந்து கவனியுங்கள் எதிர்காலம் மிக அருகில் உங்களுக்காக காத்திருக்கிறது. ஆகோள் வாசகர் வட்டம் மூலம் இளைஞர்களுக்கு வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம் என்றார்.

முன்னதாக கபிலனின் 25 ஆண்டு இலக்கிய பயணத்தை நினைவு கூரும் வகையில் 'கபி 25' ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us