UPDATED : பிப் 03, 2026 02:19 PM
ADDED : பிப் 03, 2026 02:21 PM
மதுரை: மதுரை புதுார் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர், ஜி.எஸ்.டி., தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது.
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில், தங்கம் பற்றிய விபரங்கள், அடிப்படை உலோகவியல், சுத்த தங்கம் கணக்கிடும் முறைகள், தங்கம் தரம் பார்க்கும் செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்ற, அடகு கடை வைக்க இப்பயிற்சி உதவும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது நிரம்பிய இருபாலர் பங்கேற்கலாம்.
பிப்., 9 முதல் 13 வரை தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.8500.
ஜி.எஸ்.டி., பயிற்சியில், ஜி.எஸ்.டி.,க்கு முன்பிருந்த வரி முறைகள் பற்றிய அறிமுகம், அதன் நன்மைகள், பதிவு செய்யும் வழிமுறைகள், ஜி.எஸ்.டி., ரிட்டர்ன், பைலிங் செய்தல் கற்றுத் தரப்படும்.
இப்பயிற்சி மூலம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி., நிபுணராக பணியாற்றும் வாய்ப்பு பெற முடியும். பிளஸ் 2 முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலர் பங்கேற்கலாம். பிப். 14, 15ல் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.3540.
பயிற்சிகளை முடிப்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.

