UPDATED : ஜன 29, 2026 01:24 PM
ADDED : ஜன 29, 2026 01:25 PM
கோவை: மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், 'தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், கிராமப்புற இளைஞர்களுக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சிகளில் சேர வரும் 31ம் தேதிக்குள், அந்தந்த வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்டத் திட்ட அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில் கோவைபுதூர், பொள்ளாச்சி மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் மூலம், மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை உண்டு உறைவிட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
ட்ரோன் ஆபரேட்டர், மொபைல் போன் டெக்னீஷியன், ஏஐ அனலிஸ்ட், வெப் டெக்னாலஜிஸ்ட் உள்ளிட்ட நவீன காலத்திற்கு தேவையான பல்வேறு பிரிவுகளில், இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

