மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்
UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 08:46 AM
சென்னை:
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, வங்கிப்பணிகள், இன்சூரன்ஸ், பிஎச்யு, கிளாட், யுபிஎஸ்சி, எஸ்பிஎஸ்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அறிவுசார் குறைபாடுகள், ஆட்டிசம் குறைபாடு, கற்றல் குறைபாடு, மனம் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு/ 12ம் வகுப்பு/பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சியின் காலம் 6 முதல் 9 மாதங்கள். இப்பயிற்சியில் சேர விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் முக்கியம்.
இப்பயிற்சியை டிபார்ட்மெண்ட் ஆப் அடல்ட் இன்டிபென்டன்ட் லிவ்விங் (டிஏஐஎல்) வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
தொலைபேசி எண்கள்: 81248 62799; 93614 62840; 93829 34157