sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு படையெடுத்த வாசகர்கள் 6ம் வகுப்பு மாணவி முதல் முதியோர்கள் வரை பரவசம்

/

கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு படையெடுத்த வாசகர்கள் 6ம் வகுப்பு மாணவி முதல் முதியோர்கள் வரை பரவசம்

கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு படையெடுத்த வாசகர்கள் 6ம் வகுப்பு மாணவி முதல் முதியோர்கள் வரை பரவசம்

கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு படையெடுத்த வாசகர்கள் 6ம் வகுப்பு மாணவி முதல் முதியோர்கள் வரை பரவசம்


UPDATED : மார் 01, 2026 12:51 PM

ADDED : மார் 01, 2026 12:55 PM

Google News

UPDATED : மார் 01, 2026 12:51 PM ADDED : மார் 01, 2026 12:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பெங்களூரு தினமலர் அலுவலகத்தில் உள்ள 'கடல் தாமரை புத்தக பூங்கா'விற்கு நேற்று 12 வயது மாணவி முதல் 75 வயதான பழுத்த வாசகர்கள் வரை பெரும் எண்ணிக்கையில் படையெடுத்தனர். ரேக்கில் இருந்து புத்தகங்களை பார்த்த அனைவரும் பரவசத்தில், தினமலர் நிர்வாகத்தினருக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் இயங்கி வரும் 'கடல் தாமரை புத்தக பூங்கா'வை பார்ப்பதற்கு நேற்று வாசகர்கள் படையெடுத்தனர். நண்பர், உறவினர்களுடன் வந்த வாசகர்கள் புத்தகங்களை புரட்டி எடுத்து, தங்கள் அறிவுப்பசியை போக்கி கொண்டனர்.

அப்படி வந்த வாசகர்கள், தங்கள் அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்கவும் தவறவில்லை. அவர்களில் சிலர் கூறிய வார்த்தைகள் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

முதல் ஆளாக தனது பேத்தியுடன் வருகை தந்த மல்லேஸ்வரம் 'சிவா மியூசிக்கல்ஸ்' உரிமையாளர் சி.நடராஜன் கூறியதாவது:

தமிழ் புத்தகங்களை பார்த்ததும் என்னை அறியாமல், திகைத்தேன். என் உள்ளத்தில் ஏற்பட்ட ஒளிக்கு காரணம் அன்னை தமிழே. பெங்களூரில் இத்தனை தமிழ் புத்தகங்களை வேறு எங்கும் பார்த்ததில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருவேன். இத்தனை பெரிய காரியத்தை செய்த தினமலருக்கு நன்றி... நன்றி... நன்றி.

அம்பேத்கர், கண்ணதாசன் புத்தகங்களை படித்தேன். அப்துல் கலாமின் 'எனது பயணம்' புத்தகத்தை பாதியளவு படித்தேன். புத்தகத்தை படிக்கும் போது, அவரை நேரில் சந்தித்த நினைவுகள் வந்து சென்றன.

எனது பேத்தியையும் உடன் அழைத்து வந்தேன். அவளுக்கும் வாசிப்பு பழக்கத்தை ஊட்ட துவங்கி உள்ளேன். தினமும் தினமலரை படித்த பின்னரே காபி. பல ஆண்டுகளுக்கு பின், தமிழ் எழுதுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு, கோடான கோடி நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது பேத்தியான, இளம் வாசகியான 6ம் வகுப்பு படிக்கும் தியா கூறியதாவது:

தமிழ், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என நான்கு மொழிகளையும் நன்கு வாசிப்பேன். இங்குள்ள அனைத்து புத்தகங்களையும் வாசிக்கும் திறன் என்னிடம் இருக்கிறது. இங்குள்ள ஆங்கில புத்தகங்களின் 'கலெக் ஷன்' என்னை கவர்ந்தது. 'தி ஹன்டர் இயர் ஓல்ட் மேன்' ஆங்கில புத்தகத்ததின் முதல் பத்து பக்கங்களை வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த புத்தகத்தை எனக்கு வாங்கி கொடுக்க, நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். அது போல, 'லுாசி அன்ட் தி ஜின்' புத்தகமும் வாங்கி கொடுக்க வேண்டும். என் தாத்தா விரும்பி படித்த 'அப்துல்கலாமின் எனது பயணம் புத்தகம் ஆர்டர் செய்து கொடுங்கள். நாங்கள் ரூபாய் தந்து விடுவோம்.

முதல் முறையாக எனது தாத்தாவுடன் நுாலகத்திற்கு வந்து உள்ளேன். ஜாலியா இருக்கு. ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை படித்தேன்.

இவ்வாறு அவர் கூறியது பெருமையாக இருந்தது.

இதெல்லாம் சிறுமியின் வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் மட்டும் அல்ல; இவை அனைத்தும் வருங்கால எழுத்தாளரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளாகவே தெரிந்தது.

என்னை ஈர்த்த எம்.ஜி.ஆர்., புத்தகங்கள்


நுாலகம் திறந்ததை, சில நாட்களுக்கு முன்னே அறிந்து கொண்டேன். இன்றைக்கு தான் நேரம் கிடைத்தது. நுாலகம் நன்றாக இருக்குது. இன்னும் நிறைய புத்தகங்களை எதிர்ப்பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., புத்தகங்கள் என்னை ஈர்த்தது. வெளியில் விலை கொடுத்தும் வாங்க முடியாத எம்.ஜி.ஆர்., புத்தகங்களை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நானும் சில புத்தகங்களை கொடுக்க விரும்புகிறேன். எனது விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன்.

ரமேஷ், 61, கம்மனஹள்ளி, பெங்களூரு.

வாசகரின் உருக்கமான கோரிக்கை


நுாலகத்தை பார்ப்பதற்கு அதீத ஆர்வத்துடன் புறப்பட்டேன். எண்ணற்ற தமிழ் புத்தகங்களை பார்த்து அசந்தேன். ஒரு சின்ன கோரிக்கை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெரியார் நகரில் ஒரு கிளை நுாலகம் திறக்க முடியுமா. ஆன்மிகம், மருத்துவம், சாண்டில்யன் நாவல்கள் என எனக்கு பிடித்த அனைத்தும் இருக்கின்றன. விரைவில் உறுப்பினர் அட்டை வழங்கி, புத்தகங்களை வீட்டுக்கு வழங்க வழிவகை செய்யுங்கள். அந்துமணியின் தீவிர வாசகன் நான்.

சகாயநாதன், 66, பெரியார் நகர், பெங்களூரு.

நண்பருடன் வந்த அன்பர் பரவசம்


என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது என்பதை ஆராய வந்தேன். அனைத்து பிரிவுகளிலும் முக்கியமான புத்தகங்கள் பல இருக்கின்றன. ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. எனது நண்பர் மோகனை கையோடு அழைத்து வந்துவிட்டேன். வரும் 15ம் தேதிக்குள் மற்றொரு முறை வருவேன். அப்போது, மற்றொரு நண்பரை அழைத்து வருவேன். அச்சமயம், பல மணி நேரம் அமர்ந்து புத்தகங்களை படித்து, என் நண்பருடன் விவாதிக்க திட்டமிட்டு உள்ளேன்.

சுப்பிரமணியம், 70, நந்தினி லே - அவுட், பெங்களூரு.

ஒரு நாள் முழுக்க வாசிக்கலாம்


தினமலரின் வயது தான் எனக்கும். புத்தக குவியல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்பார்ப்பின்றி வந்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது 'கடல் தாமரை புத்தக பூங்கா'. பெங்களூரு தமிழர்களுக்கு வரப்பிரசாதம். ஒரு நாள் முழுக்க இருந்து நேரத்தை செலவிடலாம். அதற்கு ஏற்ப புத்தகங்கள் உள்ளன. 'பணி ஓய்வு வாழ்க்கையை பிரகாசமாக்குங்கள்' புத்தகத்தை முதியவர்கள் அனைவரும் படிக்கலாம். சிறந்த புத்தகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருவேன்.

கிருஷ்ணன், 75, மஹாதேவபுரா, பெங்களூரு.

ஏழு நாட்களும்


வாரத்தின் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு 09.30 மணி வரை கடல் தாமரை புத்தக பூங்கா இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 93615 00327; 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us