UPDATED : பிப் 12, 2026 02:05 PM
ADDED : பிப் 12, 2026 02:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
எதிர்கால தொழில்நுட்பத் திறன், புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு உட்பட தொடர் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், டெட்எக்ஸ் நிறுவனம், எஸ்.ஆர்.ஐ.டி., சார்பில் பதாகை வெளியிடப்பட்டது.
ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் வெளியிட்டார். 24ம் தேதி கல்லுாரியில் நடக்கும் நிகழ்சசியில், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில், மனிதனின் முடிவெடுக்கும் திறன் மற்றும் நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைய உள்ளது, என்றார்.
இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், ப்ளோலிங்க்ஸ் சிஸ்டம்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், தொழில்நுட்பக் கல்வி உதவி இயக்குனர் ஷியாமளா பங்கேற்றனர்.

