UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 09:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
காந்தி எழுத்துகள், சத்தியாகிரகம் உலக, தேசிய தலைவர்கள் குறித்த செய்திகள் மற்றும் காந்தி குறித்த 11 ஆயிரத்து 720 புத்தகங்களின் டிஜிட்டல் தொகுப்பை கர்நாடகா காந்தி நினைவு நிதி தயாரித்துள்ளது.
இத்தொகுப்பை மதுரையில் காந்தி மியூசியத்திற்கு வழங்கும் விழா நடந்தது. செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் வழங்க காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், உதவி பேராசிரியர் நடராஜன் பெற்றுக் கொண்டனர்.