தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முறைகேடு புகார்: நுாலகங்களில் இருந்து 2500 புத்தகங்கள் திரும்ப பெற முடிவு

முறைகேடு புகார்: நுாலகங்களில் இருந்து 2500 புத்தகங்கள் திரும்ப பெற முடிவு

முறைகேடு புகார்: நுாலகங்களில் இருந்து 2500 புத்தகங்கள் திரும்ப பெற முடிவு


UPDATED : நவ 13, 2026 01:33 PM

ADDED : நவ 13, 2026 01:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 01:33 PM ADDED : நவ 13, 2026 01:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு புகாரை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட நுாலகங்களில் இருந்து 2500 புத்தகங்களை திரும்பப் பெறும் முடிவை பொது நுாலக இயக்ககம் எடுத்துள்ளது.

கோவையில் ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை நுாலகங்களில் இருந்து திரும்பப் பெறுவதற்கான முடிவை பொது நுாலக இயக்ககம் எடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025 - 26ம் நிதியாண்டில் பீனிக்ஸ் பதிப்பகத்தின் 1000 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை மாவட்ட மைய நுாலகம், 63 கிளை நுாலகங்கள், 16 ஊர்ப்புற நுாலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவற்றை உடனடியாக திரும்பப் பெறும் பணிகள் நடக்கிறது.

2026 - 27ம் நிதியாண்டில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 1000 புத்தகங்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 500 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாவட்ட மைய நுாலகத்துக்கு அண்மையில் வந்து சேர்ந்தன. ஆனால் கிளை நுாலகங்களுக்கு பிரித்து அனுப்பப்படாமல் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த 1500 புத்தகங்கள், ஏற்கனவே நுாலகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த 1000 புத்தகங்கள் என 2500 புத்தகங்களை மாவட்ட மைய நுாலகத்திலேயே பாதுகாப்பாக வைக்குமாறு நுாலக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us