UPDATED : நவ 13, 2026 01:34 PM
ADDED : நவ 13, 2026 01:34 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரில், சுமாரான மதிப்பெண் பெறுவோருக்கு, சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
இதன்படி ஒன்றிய அளவில் ஒரு பள்ளி என மாவட்டம் முழுவதும் இரு நாட்கள் சிறப்பு வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சிறப்பு வகுப்பு இன்று, நாளை அனைத்து பாடங்களுக்கும் நடக்கிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு பள்ளி என, 15 பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடக்கிறது. 1,632 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வி துறையினர் தெரிவித்துள்ளனர்.
