தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ குழந்தைககளை பள்ளிக்கு தயார் பண்ணுங்க!

குழந்தைககளை பள்ளிக்கு தயார் பண்ணுங்க!

குழந்தைககளை பள்ளிக்கு தயார் பண்ணுங்க!


UPDATED : பிப் 18, 2025 12:00 AM

ADDED : பிப் 18, 2025 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2025 12:00 AM ADDED : பிப் 18, 2025 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகளை பள்ளிக்கு முன்கூட்டியே தயார் செய்வதன் மூலம் புதிய இடம், புதிய சூழல், புதிய முகங்களை பதட்டமின்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள்.

குழந்தையை அடுத்தாண்டு பள்ளியில் சேர்க்க போகிறீர்கள் எனில், இப்போதிருந்தே பள்ளி குறித்து அவர்களிடம் பேசுங்கள். குழந்தைகளிடம் பள்ளிகள் ஏன் முக்கியம், அங்கு கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன, எப்படி புதிய நண்பர்களை உருவாக்கலாம் என பலவற்றைப் பற்றி, பேசத் துவங்குங்கள்.

பள்ளி துவங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, குழந்தைக்கு, குறிப்பிட்ட உறங்கும் மற்றும் எழும் நேரத்தை பயிற்சி செய்யத் துவங்குங்கள். படிப்பு, விளையாட்டு, சாப்பாடு, துாக்கம் நேரம் என மழலையர் பள்ளிகளின் வழக்கத்திற்கு ஏற்ப குழந்தைகளை மெல்ல, மெல்ல பழக்கப்படுத்த வேண்டும்.

தங்களைக் கவனித்துக்கொள்வதற்கான அடிப்படைகளை, குழந்தைகளுக்கு கற்பிப்பது முக்கியம். ஆடை அணிவது, ஷூ போடுவது, சாப்பிடுவது, கழிப்பறைக்கு செல்வது, கை கழுவுவது போன்ற பணிகளை, அவர்களாகவே செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளி குறித்த குழந்தையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளியுங்கள். குழந்தைகளிடம் பள்ளிக்குச் செல்வது பற்றிய அவர்களின் உணர்வுகளைப் பற்றிக் கேளுங்கள். அதற்கேற்ப குழந்தையை நேர்மறையாக தயார்ப்படுத்துங்கள்.

குழந்தையின் பள்ளி முதல் நாளிற்கு முன்பாக, வாய்ப்பிருந்தால் குழந்தையுடன் பள்ளிக்கு ஒரு விசிட் அடிக்கலாம். பள்ளி விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் என பள்ளி வளாகத்தை, குழந்தையுடன் சுற்றி பாருங்கள். இதன்மூலம், பள்ளி குழந்தைகளுக்கு ஒரு பழக்கமான இடமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us