ஏ.ஐ., பயன்படுத்தும் விதத்தை பொருத்து தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும் கருத்தரங்கில் தகவல்
ஏ.ஐ., பயன்படுத்தும் விதத்தை பொருத்து தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும் கருத்தரங்கில் தகவல்
UPDATED : பிப் 18, 2025 12:00 AM
ADDED : பிப் 18, 2025 09:36 AM
மதுரை :
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தை பொருத்து அதன் தாக்கம் இருக்கும் என மதுரை பாத்திமா கல்லுாரி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
கணினி அறிவியல், எம்.சி.ஏ., ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறைகள் சார்பில் ஏ.ஐ., கண்டுபிடிப்புகள் மற்றும் பீட்டா தலைமுறையினரில் அதன் தாக்கம் குறித்து இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது. பி.சி.ஏ., துறைத் தலைவர் செல்வராணி வரவேற்றார். கணினி அறிவியல் துறைத் தலைவர் வித்யா கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முதல்வர் செலின் சகாய மேரி துவக்கவுரை நிகழ்த்தினார்.
குயின்டைப் டெக்னாலஜிஸின் தலைமை இயக்க அதிகாரி ராமலிங்கம் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசுகையில், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்நுட்பம் மாறிவருகிறது. தற்போது பிரபலமாகி வரும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் நடைமுறை பிரச்னைகளை துல்லியமாக ஆராய்ந்து எளிதில் நிவர்த்தி செய்ய முடிகிறது. அதற்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் பற்றிய அறிவு அவசியமாகிறது.
இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பினும் சவால்களும் நிறைந்துள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்து அதன் தாக்கம் இருக்கிறது என்றார்.
ஐ.சி.டி. அகாடமி மூத்த மேலாளர் முரளிராஜன், கல்லுாரி செயலாளர் இக்னேஷியஸ் மேரி பேசினர். ஐ.டி., துறைத் தலைவர் லீனா பிரேம குமாரி நன்றி கூறினார்.

