UPDATED : ஜன 10, 2026 04:30 PM
ADDED : ஜன 10, 2026 04:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: டெல்லியில் தேசிய கோகோ போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. நத்தம் துறைமங்கலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கோகோ போட்டியில் தங்கம் வென்று சாம்பியன்ஷிப் பெற்றனர். மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜ்குமார், விளையாட்டு ஆசிரியர் சோலைமலை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

