தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு, 23 மையங்களில் இன்று நடக்கிறது
தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு, 23 மையங்களில் இன்று நடக்கிறது
UPDATED : ஜன 10, 2026 04:24 PM
ADDED : ஜன 10, 2026 04:30 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 8 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் மாதம் தோறும் 1000 ரூபாய் என 12 மாதங்களுக்கு உதவித்தொகை பெரும் வகையில் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி தகுதி தேர்வு என்.எம்.எம்.எஸ்., இன்று 23 மையங்களில் நடக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் 5484 மாணவர்கள் பங்கேற்க உள்ள இத்தேர்வில் கணக்கு பாடத்தில் 20 மதிப்பெண்கள், அறிவியல் பாடத்தில் 35 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 35 மதிப்பெண்கள் என 90 மதிப்பெண்களுக்கான தேர்வாக நடக்க உள்ளது. தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மாணவர்கள் வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அலைபேசி, கறுப்பு நிற பந்துமுனைப் பேனா, ஒளி ஊடுருவக்கூடிய வாட்டர் பாட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

