தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி


UPDATED : ஜன 10, 2026 04:24 AM

ADDED : ஜன 10, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 04:24 AM ADDED : ஜன 10, 2026 04:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, பாளையம் சுங்கச்சாவடி நிறுவனம் சார்பில் நிதி உதவியை மாவட்ட கலெக்டர் சதீஷ் நேற்று வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தில், 25 அரசு பள்ளிகளை சேர்ந்த, 53 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நெசவாளர் காலனியில் நடந்தது.



இதில், பாளையம் சுங்கசாவடி நிறுவன குழுமத்தின் பொது மேலாளர் சதீஷ்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சேலம் குழு தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, 10,000 ரூபாய் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு, 5,000 ரூபாய் உதவித்தொகையை கலெக்டர் சதீஷ் வழங்கினார். இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, பாளையம் சுங்கச்சாவடி திட்ட தலைவர் நரேஷ் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us