பள்ளி படிப்பை முடித்து கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு 30,000 ரூபாய் உதவித்தொகை
பள்ளி படிப்பை முடித்து கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு 30,000 ரூபாய் உதவித்தொகை
UPDATED : மார் 07, 2026 11:37 AM
ADDED : மார் 07, 2026 11:38 AM

உயர் கல்வித்துறை
ரூ.2500 கோடி செலவில், 40 கல்லுாரிகள், 11 பாலிடெக்னிக்குகள் அதிநவீன முறையில் புதுப்பிக்கப்படும்.
அரசு பொறியியல், முதன்மை நிலை கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,000 விரிவுரையாளர் பணியிடங்கள், பல்கலையில் காலியாக உள்ள 1,000 விரிவுரையாளர் பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவியர் படிக்கும் 25 கல்லுாரிகள், மூன்று பாலிடெக்னிக்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும், 50 அரசு முதல் தர கல்லுாரிகளின் புதுப்பித்தல் பணிக்கு, 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கியில், நவீன வசதியுடன் கூடிய கல்லுாரி நிறுவப்படும். சித்ரதுர்கா அரசு பொறியியல் கல்லுாரியில் புதிதாக, 15 பாட வகுப்புகள் கொண்டு வரப்படும்.
அறிவியல், கணித துறையில் பட்டம் பெற்ற 3,000 பெண்களுக்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இதற்கு, 13.50 கோடி ரூபாய் நிதி தரப்படும்.
விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லுாரி மேம்பாட்டிற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
அரசு பள்ளியில் படித்து முடித்து கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு 30,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பாக, 90 நாட்கள் அனுமதி அளிக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், ஜாதி ரீதியிலான பிரச்னையை தவிர்க்க, 'ரோஹித் வெமுலா சட்டம்' கொண்டு வரப்படும்.
கல்லுாரி, பல்கலை கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்படும்.
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பெங்களூரு, தார்வாட்டில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். இதற்கு, 20 கோடி ரூபாய் நிதி தரப்படும்.
பீதர் மாவட்டம் பசவகல்யாணாவில் தனியார் கல்வி நிறுவனமான வச்சனா பல்கலைக்கழகம் அமைவதற்கு, 25 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.

