தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 சதவீத தேர்ச்சியில் சாதனை படைக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி

100 சதவீத தேர்ச்சியில் சாதனை படைக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி

100 சதவீத தேர்ச்சியில் சாதனை படைக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி


UPDATED : செப் 27, 2026 02:18 PM

ADDED : செப் 27, 2026 02:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 02:18 PM ADDED : செப் 27, 2026 02:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுபாக்கம்:
மாவட்டத்தின் கடைக்கோடியில், ஒன்றிய தலைமையிடமாக மங்களூர் கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த, 1980ம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளி துவக்கப்பட்டு, 2007ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுவதால், கடைக்கோடி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி கற்கின்றனர்.

தற்போது, 21 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம், 11 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு, 700க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்துடன் அனுபவமிக்க ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது.

சாதனை பள்ளி இப்பள்ளி பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து, 6 ஆண்டுகளாக, 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இதற்காக கடந்த, 2022-23 மற்றும், 2024-25ம் ஆண்டுகளில் கலெக்டர் விருது வழங்கினார்.

இந்த சாதனை படைக்க காரணமான ஆசிரியர்களுக்கு, கடந்த 2023-24ம் ஆண்டில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், இப்பள்ளியின் ஆசிரியர் அருள் (விலங்கியல் பாட பிரிவு) சிறப்பாக பணியாற்றியதற்காக கலெக்டர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

மாணவர்கள் சாதனை இப்பள்ளி மாணவர்கள் கடந்த 2022-23ம் ஆண்டில் மாவட்ட அளவில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றனர்.

இங்கு படித்த மாணவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள், வருவாய், காவல் மற்றும் தீயணைப்பு துறை, கல்லுாரி பேராசிரியர்களாக பணிபுரிந்து, உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் தேவை பள்ளி கட்டடத்தை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யாததால் மழைக்காலத்தில் வகுப்பறை கட்டடம் ஒழுகுகிறது.

ஆய்வகம் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) இல்லாததால் மாணவர்களின் செயல்முறை கல்வி பாதிக்கிறது. எனவே, மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருக்க, தலைமை ஆசிரியர் நியமனம், இருபாலர் கழிவறை, ஆய்வகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கூடுதல் வகுப்பறை கட்டடம், பஸ் வசதி, உணவருந்தும் இடம்; சைக்கிள் ஷெட் உள்ளிட்டவைகளை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அளவில் முதலிடம் பிடிக்க முயற்சி


மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 13 ஆண்டுகளாக உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, நடப்பாண்டில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பணிபுரிகிறேன். நான் பள்ளியில் பணிபுரிய துவங்கிய போது, 450 மாணவர்கள் படித்து வந்தனர்.

ஆசிரியர்களின் தொடர் முயற்சியால், தற்போது, 730 மாணவர்கள் படித்தும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது பெருமையாக உள்ளது. நடப்பாண்டு மாநில அளவில் முதலிடம் பிடிக்க முயற்சி வருகிறோம்.

- இளையராஜா, தலைமை ஆசிரியர் (பொறுப்பு).


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us