கல்லுாரிகளில் காலி பணியிடம் உறக்கத்தில் அரசு: பா.ம.க.,
கல்லுாரிகளில் காலி பணியிடம் உறக்கத்தில் அரசு: பா.ம.க.,
UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM
ADDED : ஜூலை 09, 2025 08:32 AM
சென்னை:
கல்லுரிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர்கள், பணிமூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகின்றனர். கல்லுாரி ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் தயாராக உள்ள நிலையில், ஒரே நாளில் அனைத்து கல்லுாரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெறும் முதல்வர்கள் யார் என, அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், அவற்றை நிரப்பாமல் அரசு என்ன செய்கிறது?
தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 9,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து அரசு கல்லுாரிகளுமே, கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பி இருக்கின்றன.
இந்நிலையில், முதல்வர்களும் இல்லாவிட்டால், அரசு கல்லுாரிகளில் கட்டடங்கள் மட்டுமே இருக்கும்; கல்வி இருக்காது.
தி.மு.க., அரசு உறங்கிக் கொண்டிருக்கிறதா? காலியாக உள்ள 96 அரசு கல்லுாரி முதல்வர் பணியிடங்கள், 9,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.