UPDATED : ஏப் 08, 2025 12:00 AM
ADDED : ஏப் 08, 2025 07:47 AM
 பொள்ளாச்சி:
 பொள்ளாச்சி அருகே, பி.நாகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கல்வி சுற்றுலாவாக கோவைக்கு சென்றனர்.
பொள்ளாச்சி அருகே, பி.நாகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கல்வி சுற்றுலாவாக கோவை ஜி.டி., நாயுடு அருங்காட்சியகத்துக்கு சென்றனர். மொத்தம், 70 மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று, அங்கு பழங்கால கார்கள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் மையம் ஆகியவற்றை கண்டுகளித்தனர்.
அறிவியல் மையத்தில் உள்ள பல பிரமிப்பூட்டும், அறிவியல் வினோதங்களை கண்டு உற்சாகமடைந்தனர். வெளிச்சத்தை பிரதிபலித்து வண்ணமயமான வடிவங்களை உருவாக்கும் கருவி, அலை உருவாக்கம், எரிசக்தி மற்றும் துல்லியமான அதிர்வுகளால் உருவாகும் அலைகள் (ஒலி, ஒளி, நீர்) போன்றவற்றை ரசித்தனர்.
மேலும், தொங்கும் வண்டி, இயக்கமும், சமநிலை விதிகளும் காட்டும் மாதிரி, திரவ அழுத்த தொலைக்காட்சி, திரவ அழுத்தத்தின் கொள்கையால் இயக்கப்படும் மாதிரி போன்ற பலவகையான அறிவியல் வினோதங்களை கண்டு ரசித்தனர். தலைமையாசிரியர் (பொ) ரஜனி, ஆசிரியர் இளமதி ஆகியோர் பங்கேற்றனர்.

