தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்


UPDATED : செப் 25, 2026 06:15 PM

ADDED : செப் 25, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 06:15 PM ADDED : செப் 25, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க, மாவட்ட செயலாளர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு, 11 மாத ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் செவிலியர்களை தேர்ந்தெடுக்க முனைந்துள்ளது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அரசின் இந்த நடைமுறையால், அரசு வேலை கனவில் உள்ள செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த ஒப்பந்த முறையை அரசு கைவிட்டு, எம்.ஆர்.பி., தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி, நிரந்தர செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். அரசு புதிதாக தொடங்க உள்ள, 6 செவிலியர் கல்லுாரிகளில், ஒப்பந்த முறையில் ஆசிரியர்களையும், ஊழியர்களையும் நியமிக்கும் முறையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதியில் இந்த அரசு கூறியது போல், 5 ஆண்டுக்கு மேல் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க, மாநில செயற்குழு முடிவின் படி, வரும், 28 மற்றும், 29ம் தேதிகளில், செவிலியர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள், செவிலியர் கல்லுாரிகளில் பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கருப்பு பட்டை அணிந்து, பணிபுரிவது என்றும், தமிழக முதல்வருக்கு எங்களின் கோரிக்கைகளை அனைத்து செவிலியர்களும் மின் அஞ்சல் செய்வது என்றும், அதே நாளில் சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us