UPDATED : செப் 25, 2026 06:13 PM
ADDED : செப் 25, 2026 06:15 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அனுப்பிய கடிதம்:
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்., 17ல் உள்ளூர் விடுமுறையும், அதற்கு மாற்றாக செப்., 26 வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. செப்., 26 காலாண்டு விடுமுறை. அன்றைய நாளில் பள்ளி வகுப்புகள் செயல்படக் கூடாது என அரசின் வழிகாட்டுதல் உள்ளது.
எனவே செப்., 26க்கு பதில் அக்டோபரில் ஏதாவது ஒரு நாள் வேலைநாளாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு ஆசிரியர்கள் முன்கூட்டி மேற்கொண்ட திட்டமிடல் பணிகள் பாதிக்காமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
