UPDATED : நவ 26, 2024 12:00 AM
ADDED : நவ 26, 2024 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர், ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் நடந்தது.
தலைவர் லத்தீப் கான், செயலாளர் ஜெயராஜ், சேவியர், சேகர், கணேஷ்வரி பங்கேற்றனர். மாநில தலைவர் சங்கர் பாபு தீர்மானங்களை நிறைவேற்றினார். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
மருத்துவகாப்பீடு குடும்ப ஓய்வூதியம் குறித்து தாமதம் இன்றி அரசாணை வெளியிட வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் 2025 ல் சென்னை சமூகநலத்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.