தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வேளாண் விஞ்ஞானிக்கு கவர்னர் ரவி பாராட்டு

வேளாண் விஞ்ஞானிக்கு கவர்னர் ரவி பாராட்டு

வேளாண் விஞ்ஞானிக்கு கவர்னர் ரவி பாராட்டு


UPDATED : பிப் 09, 2026 10:52 PM

ADDED : பிப் 09, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 10:52 PM ADDED : பிப் 09, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானியை, கவர்னர் ரவி பாராட்டினார்.

தமிழகத்தை சேர்ந்த, வேளாண் விஞ்ஞானி கே.ராமசாமிக்கு, 2026ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை கவர்னர் மாளிகையில், அவருக்கு நேற்று, பாராட்டு விழா நடந்தது.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது: வேளாண் விஞ்ஞானி கே.ராமசாமிக்கு, வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது, அவருடைய தனிப்பட்ட பங்களிப்புக்கு மட்டுமல்லாமல், நாட்டின் நலனுக்காக பாடுபடும் விவசாயிகளின் அர்ப்பணிப்பையும், பிரதிபலிப்பதாக உள்ளது.

இவர், அறிவியல் புதுமைகளையும், மக்களின் தேவைகளையும் ஒருங்கிணைத்து, ஆராய்ச்சியை நடைமுறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இது மண் வளம், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவியது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us