அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் புதிய கட்டடம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் புதிய கட்டடம்
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 09:42 AM
அன்னுார்:
அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, 73 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளிக்கு பி.எல்.எம்.எப்., கோயம்புத்தூர் அக்மே ரவுண்ட் டேபிள் 133 மற்றும் கோயம்புத்தூர் அக்மே லேடீஸ் சர்க்கிள் 85 ஆகியவற்றின் சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,700 சதுர அடியில், நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
ரவுண்ட் டேபிள் சேர்மன்கள் பங்கஜ் பையா, கார்த்திக் குமார், அக்மே லேடிஸ் கிளப் தலைவர்கள் ராணி, கிருத்திகா ஸ்ரீ ஆகியோர் குத்துவிளக்கேற்றி, புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர். நன்கொடையாளர்கள் கார்த்திகேயன், கருப்புசாமி, சின்னதுரை கவுரவிக்கப்பட்டனர். பெற்றோர் ஆசிய கழகத் தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் நாராயணசாமி மற்றும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை சித்ரா கூறுகையில், பள்ளியில் கூடுதலாக மூன்று ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம் என இரு வழியிலும் கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.