UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை:
நாமக்கல் மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான தடகளப்போட்டி நாமக்கல்லில் தனியார் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில் நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்வர் சீனியர் பிரிவில், தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர். நீளம் தாண்டுதலில் சூப்பர் சீனியர் பிரிவில், 12ம் வகுப்பு மாணவி தேன்மொழி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். சீனியர் பிரிவில் ஸ்ருதிகா, 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும், உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிகளை தலைமைஆசிரியை சத்தியவதி, உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் அன்பழகன், நிர்வாகிகள் செந்தில், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.