UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:11 AM
ஈரோடு:
ஈரோட்டில் வ.உ.சி., விளையாட்டு மைதான திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதியிடம், ஐந்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள், 2024ல் நடந்த பட்டதாரி ஆசிரியர், ஆசிரிய பயிற்றுனர் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் முடிந்து விட்டது. இந்நிலையில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3,192 என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால், காலி பணியிடம் இதைவிட அதிகமாக உள்ளது. மேலும், 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
2013 மற்றும் 2017 முதல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள் அப்போது கடைபிடிக்கப்பட்ட வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்து தவித்து வருகிறோம். இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வையும் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளோம். கருணை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தகுதி தேர்வு, கட்டாய தமிழ் தகுதி தேர்வு, நியமன தேர்வில் வெற்றி பெற்ற எங்களுக்கு பணி வாய்ப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.