தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஜி.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.ஜி.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.ஜி.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : பிப் 20, 2026 01:14 PM

ADDED : பிப் 20, 2026 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2026 01:14 PM ADDED : பிப் 20, 2026 01:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், 3435வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலர் பாலசுப்ரமணியம் விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன், ஆண்டு அறிக்கை படித்தார்.

பெங்களூரு இந்திய மேலாண்மை கழகத்தின் வடிவமைப்பியல் அறிவியல் இயக்குனர் (பொ) பேராசிரியர் தினேஷ் குமார், கேரள வன ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் ஷ்யாம் விஸ்வநாத் ஆகியோர், மாணவர்களுக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கினர்.

மொத்தம், 35 துறைகளை சேர்ந்த, 2,641 மாணவர்கள் பட்டம் பெற்றனர். ஒவ்வொரு துறையிலும் தரவரிசையில் முதல் மூன்றிடம் பெற்ற, 248 மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெங்களூரு இந்திய மேலாண்மை கழகத்தின் வடிவமைப்பியல் அறிவியல் இயக்குனர் பேசியதாவது:

இன்றைய காலகட்டம், தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டமாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கூறும் விளக்கங்களை அப்படியே ஏற்க கூடாது. அவை கூறும் செய்தியை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு என்பது மிகச்சிறந்த கருவியாகும். அதை பயன்படுத்தி சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியம். நாம் செயலில் வெற்றி பெற மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு, மனவளம் பெற தியானம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

கல்லுாரி செயலர் அலுவலர் முனியசாமி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மகேஸ்வரி, முனைவர் முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us