தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கான நேர்காணல்

அண்ணாமலை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கான நேர்காணல்

அண்ணாமலை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கான நேர்காணல்


UPDATED : பிப் 20, 2026 01:16 PM

ADDED : பிப் 20, 2026 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2026 01:16 PM ADDED : பிப் 20, 2026 01:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான நேர்காணல் நடந்தது.

அண்ணாமலை பல்கலைகழத்தில், ராணிப்பேட்டை பாரதிதாசனர் கல்விக்குழுமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணிக்கான வளாக நேர்காணல் நடந்தது.

நேர்காணலில் 240 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பின்னர் கல்வியியல், உளவியல், நுண்ணுயிரியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உடற்கல்வியியல் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த, 58 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, இணைப்பதிவாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

நிகழ்வில் புல முதல்வர்கள் ஸ்ரீராம், அம்பேத்கர், பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரக, இயக்குநர் பிரகதீஸ்வரன், துறை தலைவர்கள் கிருஷ்ணசாமி, முல்லைநாதன், வெங்கடேசன். இணை இயக்குநர் சிவசுப்ரமணி, பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலர்கள் நீலகண்டன், செந்தில்குமார், பயிற்சி வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா சாந்தி, கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us