sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1 தேர்வு முடிவு வெளியீடு

குரூப் - 1 தேர்வு முடிவு வெளியீடு

குரூப் - 1 தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : செப் 03, 2024 12:00 AM

ADDED : செப் 03, 2024 01:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2024 12:00 AM ADDED : செப் 03, 2024 01:09 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் - 1 தேர்வு முடிவு நேற்று வெளியானது.

டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு பணியாளர்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரிகள் நிலையிலான, 90 பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த மார்ச் 28ல் வெளியானது.

இதற்கான முதல்நிலை தேர்வுகள், ஜூலை 13ல் நடந்தன. அவற்றில் தேர்ச்சி பெற்ற, 1,907 பேரின் விபரங்களை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லுாயிஸ் நேற்று, http://www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டார்.

இதில் தேர்ச்சி பெற்றோர், டிச., 10 முதல் 13ம் தேதி வரை, சென்னையில் நடக்க உள்ள முதன்மை தேர்வில் பங்கேற்கலாம். அதற்கு, வரும் 6 முதல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us