தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு; தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம்


UPDATED : பிப் 09, 2026 01:35 PM

ADDED : பிப் 09, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 01:35 PM ADDED : பிப் 09, 2026 01:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
குரூப் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால், தேர்வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகம் முழுவதும் நேற்று குரூப், 2, குரூப் 2 'ஏ' தேர்வுகள் நடக்க இருந்தன. உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், உள்ளிட்ட பதவிகளுக்கு, காலியாக உள்ள 828 பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதாக இருந்தது.

தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு காலை முதல், தேர்வர்கள் வரத்துவங்கினர்.

தேர்வை 331 பேர் எழுத இருந்தனர். அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அமர்ந்துவிட்ட நிலையில், தேர்வு ஒத்தி வைப்பு குறித்த அறிவிப்பு வந்ததால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us