பள்ளிகளுக்கு இடையிலான லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகள்
பள்ளிகளுக்கு இடையிலான லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகள்
UPDATED : பிப் 09, 2026 01:37 PM
ADDED : பிப் 09, 2026 01:40 PM
திண்டுக்கல்:
சி.எஸ்.கே., திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான லீக்' சுற்று கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., ஸ்ரீவி., கல்லுாரி மைதானங்களில் நடந்தது.
ஒட்டன்சத்திரம், ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 15.5 ஓவர்களில் 46 ரன்கள் (எஸ்.என்.ஸ்ரீஹரி 5 விக்கெட்டுகள், ஹாட்ரிக்) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பிரசித்தி வித்யோதையா - ஏ அணி 5.5 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்து வெற்றி வெற்றது.
வக்கம்பட்டி ,ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 17 ஓவர்களில் 100 ரன்கள் (எஸ்.கமல்ரிஷிகேஷ் 3 விக்கெட்டுகள், டி.லட்சுமிதரண் 3 விக்கெட்டுகள்) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 16 ஓவர்களில் 102/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வேடசந்துார், பெட்போர்டு அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 15.3 ஓவர்களில் 41 ரன்கள் (டி.சஞ்சய் 3 விக்கெட்டுகள்) எடுத்து ஆல் அவுட்' ஆனது. கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளி 7.5 ஓவர்களில் 42/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல், எஸ்.எம்.பி.எம்., பள்ளி அணி 30 ஓவர்களில் 204/5 ரன்கள் (பி.நித்தரசன் 104 (நாட் அவுட்), பி.கன்வால்கிஷோர் 74, ஏ.ஹேமந்த் 3 விக்கெட்டுகள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய செட்டிநாயக்கன் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 27.2 ஓவர்களில் 87 ரன்கள் (வி.ஜி.ரித்தின் விநாயக் 3 விக்கெட்டுகள்), எஸ்.ஏ.எஸ்., அர்ஜூனா 3 விக்கெட்டுகள்) எடுத்து ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 30 ஓவர்களில் 205/1 ரன்கள் (எஸ்.அபிநயா 61, நாட் அவுட், டி.பாரதி 51 நாட் அவுட், ஆர்.ஷகில் 69) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா - பி அணி 24.1 ஓவர்களில் 182/5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி நடந்த பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் மழை பெய்தது. பிரசித்தி வித்யோதயா - பி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வேடசந்துார், கம்பைன்டு பள்ளிகள் அணி 30 ஓவர்களில் 182/7 ரன்கள் (எம்.அருண்பிரபா 58) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் அச்சுதா அகாடமி பள்ளி 27.3 ஓவர்களில் 134 ரன்களுக்கு (பி.முகேஸ் 52, எம்.அருண்பிரபா 3 விக்கெட்டுகள்) ஆல் அவுட்' ஆனது.
திண்டுக்கல், நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளி அணி 15.3 ஓவர்களில் 58 ரன்கள் (டி.ஜீவன் பிரகாஷ் 3 விக்கெட்டுகள், பி.சுதன் 3 விக்கெட்டுகள், பி.விஸ்வந்த் 3 விக்கெட்டுகள்) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய வேடசந்துார் பெட்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9.2 ஓவர்களில் 59/2 ரன்கள் எடுத்தது.

