sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ குருப்-2 இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குருப்-2 இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குருப்-2 இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்


UPDATED : அக் 09, 2024 12:00 AM

ADDED : அக் 09, 2024 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2024 12:00 AM ADDED : அக் 09, 2024 09:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை :
உடுமலையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், உடுமலை பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குடிமைப்பணிகள், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

உடுமலை, பழநி, தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்தும் தேர்வர்கள் இந்த வகுப்புகளுக்கு வருகின்றனர்.

குரூப்-2 முதன்மைத்தேர்வு சில மாதங்களில் நடக்க உள்ளது. குருப் 2 பிரிமிலினரி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இத்தேர்வில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது குரூப்- 2 முதன்மைத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், உடுமலை மையத்தில் துவக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் சுரேஷ் பயிற்சிகளை துவக்கி வைத்தார். நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.

அரசு விடுமுறை நாட்கள் தவிர, நாள்தோறும் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை வகுப்பு நடக்கிறது. வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும் மையத்தில் நடக்கிறது. தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பமுள்ள தேர்வர்கள், வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us