புள்ளிங்கோ மாணவர்களுக்கு முடி சீரமைப்பு : ஆர்.டி.ஓ., அதிரடி
புள்ளிங்கோ மாணவர்களுக்கு முடி சீரமைப்பு : ஆர்.டி.ஓ., அதிரடி
UPDATED : ஜன 07, 2025 12:00 AM
ADDED : ஜன 07, 2025 09:56 AM
பண்ருட்டி :
பண்ருட்டி அரசு பள்ளி புள்ளிங்கோ மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., அதிரடி உத்தரவால், தலைமுடி வெட்டி சீரமைக்கப்பட்டது.
கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா நேற்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் விசிட் செய்தார். அப்போது பிளஸ் 2 வகுப்பறையில் மாணவர்கள் சிலர் புள்ளிங்கோ ஸ்டைலில், தலை முடி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் பலமுறை எச்சரித்தும் திருந்தவில்லை என்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., அபிநயா, முடி திருத்துவோர்களை பள்ளிக்கு வரவழைத்து, புள்ளிங்கோ ஸ்டைலில் தலைமுடி வைத்திருந்த 25 மாணவர்களின் முடியை வெட்டி சீரமைத்தனர்.
அப்போது தலைமையாசிரியர் ஆலமர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு பழனி, சண்முகவள்ளிபழனி, பெற்றோர் ஆசிரியர் குழு துணைத் தலைவர் லோகநாதன், வி.ஏ.ஒ., முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆர்.டி.ஓ.,வின் அதிரடி நடவடிக்கையை பெற்றோர் பலரும் பாராட்டினர்.

