தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி


UPDATED : ஜூன் 18, 2026 06:42 PM

ADDED : ஜூன் 18, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 06:42 PM ADDED : ஜூன் 18, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்:
வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் தொழில் முனைவோராக மாற்றும் வகையில் கைவினைப் பொருட்கள் செய்வதை கற்றுக்கொள்வது பலன் இருக்கும் என, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமிற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். மத்திய அரசு கைவினை கலைஞர்கள் அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குனர் ரூபச்சந்தர் முகாமை துவக்கி வைத்தார்.

முகாமில், காகித கூழ், பயன்படுத்தி பொம்மைகள் செய்வது, களிமண்ணால் மண் பாண்டங்கள், பனை ஓலையால் பொருட்கள் மற்றும் தோல் சிற்பங்கள் செய்வது குறித்து கைவினை கலைஞர் முனுசாமி தலைமையில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us