விவசாயம், கல்வி, சுகாதாரத்தில் தடம் பதிக்கும் எச்டிஎப்சிஐ பரிவர்த்தன்
விவசாயம், கல்வி, சுகாதாரத்தில் தடம் பதிக்கும் எச்டிஎப்சிஐ பரிவர்த்தன்
UPDATED : செப் 29, 2025 08:13 AM
ADDED : செப் 29, 2025 08:13 AM
சென்னை:
எச்டிஎப்சிஐ வங்கியின் சமூக பொறுப்பு பிரிவு 'பரிவர்த்தன்' திட்டம், தமிழ்நாட்டில் இதுவரை 1.4 கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015 முதல் செயல்பட்டு வரும் இத்திட்டம், மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களை சென்றடைந்துள்ளது. கிராம வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், நிதி கல்வி, இயற்கை வள மேலாண்மை மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட ஆறு துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பாசன வசதி, ரசாயனமில்லா விவசாயம், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஸ்மார்ட் பள்ளிகள், சுகாதார வசதிகள் மற்றும் நிதி மோசடி விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் ஆயிரக்கணக்கானோர் நேரடியாக பயனடைந்துள்ளனர். 2,500-க்கும் மேற்பட்ட சூரிய ஆற்றல் மோட்டார்கள், 55-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பள்ளிகள், 3,000-க்கும் மேற்பட்ட சுகாதார வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிஎஸ்ஆர் பிரிவு தலைவர் நுஸ்ரத் பாத்தான் கூறுகையில், “ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தேவைக்கேற்ப திட்டங்களை வடிவமைத்து, நிலைத்த வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம்” எனத் தெரிவித்தார். தமிழ்நாடு கிளை தலைவர் குமார் சஞ்சீவ், “சமூக முன்னேற்றம் மற்றும் வங்கி சேவைகளில் இரண்டிற்கும் சம முக்கியத்துவம் வழங்குகிறோம்” என்றார். கடந்த நிதியாண்டில் எச்டிஎப்சிஐ வங்கி நாடு முழுவதும் ரூ.1,068 கோடி செலவிட்டு, 10.56 கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.