தேர்தல் பணியில் விலக்கு வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்
தேர்தல் பணியில் விலக்கு வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்
UPDATED : டிச 18, 2025 07:57 AM
ADDED : டிச 18, 2025 07:59 AM

மதுரை:
'சட்டசபை தேர்தல் பணிகளில் தலைமையாசிரியர்களுக்கு முழுமையாக விலக்களிக்க வேண்டும்' என மதுரையில் நடந்த உயர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டம் தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. புதிய செயலாளராக திவ்யநாதன், பொருளாளராக ஜெயக்குமார், இணை செயலாளராக சரவணன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
கூட்டத்தில், சட்டசபை தேர்தல் பணியில் இருந்து உயர், மேல்நிலை தலைமையாசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். பள்ளி பயன்பாட்டிற்காக அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகி ரமேஷ் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், நிர்வாகிகள் லாவண்யா சுந்தரி, ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குபேந்திரன் நன்றி கூறினார்.

