கணக்கு பாடத்திற்கு செயலி- அரசு பள்ளி ஆசிரியரின் அசத்தலான ஆண்ட்ராய்டு முயற்சி
கணக்கு பாடத்திற்கு செயலி- அரசு பள்ளி ஆசிரியரின் அசத்தலான ஆண்ட்ராய்டு முயற்சி
UPDATED : டிச 18, 2025 08:00 AM
ADDED : டிச 18, 2025 08:00 AM

புதுச்சேரி:
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துக்கருப்பன். இவர், தற்போது பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தங்களுடைய கணித பாடத்தை எளிதாக புரிந்துகொண்டு தேர்வில் சிறந்து விளங்க வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொழில்நுட்பத்தை தன்னுள் கலந்து ஒரு ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியுள்ளார்.
மாணவர்களின் கணிதப் பீதியை கலைத்து, கற்றலை எளிதாக்கி வரும் இந்த ஆண்ட்ராய்டு செயலி இணைய உலகிலும், கல்வி உலகில் தற்போது தனி கவனம் பெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் கணிதம் 80 மதிப்பெண்ணிற்கு எழுதப்படுகின்றது. இதில் 20 மதிப்பெண் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய வினாக்களாகும். இந்தப் பகுதிக்கு மாணவர்கள் வலுவாகத் தயாராக வேண்டும் என்பதையே தனி கவனம் கொண்டு உருவாக்கி உள்ளார்.
அதற்காகவே உருவாக்க ப்பட்ட இந்த செயலியி ல் தலைப்பு வாரியான வினாக்கள், பயிற்சி தேர்வுகள், நேர வரையறையுடன் கூடிய மாதிரி தேர்வுகள், தேர்வு முடிவில் சரி-தவறு பகுப்பாய்வுடன் ஒவ்வொரு விடைக்கும் தெளிவான விளக்கமும் கிடைப்பது தனி சிறப்பு. அத்துடன் இவை அனைத்தும் ஒரே தளத்தில் கிடைப்பது மாணவர்கள் கணிதத்தை திகட் டாமல் கற்க உதவுகிறது. செயலியைத் திறக்கும் ஒவ்வொரு தடவையும் மாணவர்களுக்கு ஒரு புதிய கணித சூத்திரம் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. இது மாணவர்களின் நினைவாற்றலை அதிகரித்து, தேர்வு நேரத்தில் அவர்கள் எளிதில் நினைவு கூர்வதற்கும் உதவுகிறது.
மாணவர்கள் எந்த பாடத்தலைப்பில் வலிமையாக உள் ளனர், எந்த தலைப்பில் குறைபாடு உள்ளது, எந்த பகுதிக்கு மாணவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர், இத்தகவல்களை அனைத்தும் செயலி தானாகவே ஆய்வு செய்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தும். இது ஒரு ஆசிரியரைப் போலவே மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணித்து, அவர்களை சரியான பாதையில் செலுத்தும் வகையில் செயல்படுகிறது.
சிறப்பு அம்சங்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. செயலியில் எந்த விளம்பரமும் இல்லை. மாணவர்கள் ஓர் தடையும் இல்லாமல் கற்கலாம். ஒருமுறை நிறுவிய பின் இணையம் தேவையில்லை. எல்லா சாதனங்களிலும் எளிதாக இயங்கும். பயனர்களின் எந்த தனிப்பட்ட தகவலும் சேகரிக்கப்படாது. முழு பாதுகாப்பு. அதனால் மாணவர்கள் தங்கள் கவனத்தை கணிதப் பாடத்திலேயே 100 சதவீதம் செலுத்தி பயிற்சி செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றலுக்கு ஒரு உறுதியான வழிகாட்டுதல் தேவை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்காக தொழில்நுட்பத்தைத் தழுவி இவ்வளவு பயனுள்ள கருவியை உருவாக்கியுள்ளது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனை. கணிதத்தை கடினம் என நினைக்கும் மாணவர்களுக்கு, இந்த செயலி ஒரு கற்க ண்டு.
செயலியைப் பெற https://play.google.com/store/apps/details?id=com.iniyatamil.mathsx என்ற இணையதள முகவரிக்குச் செல்லலாம்.

