UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவையில் கடந்த 2008ம் ஆண்டு முதல், பேஷனிஸ்டா எனும் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி நடந்து வருகிறது.
ரேஸ்கோர்ஸ் ரோடு, தாஜ் விவாந்தா ஓட்டலில், 34வது பதிப்பு பேஷனிஸ்டா கண்காட்சி நேற்று துவங்கியது. இந்தியாவின் முன்னணி டிசைனர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆடைகள், அணிகலன்கள், திருமண கலெக்சன், பேக்ஸ், காலணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான அழகு சாதன பொருட்களின் எலைட் டிசைன்களை, ஒரே இடத்தில் வாங்கலாம்.
இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை, காலை, 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, பொதுமக்கள் பார்வையிடலாம்.