தேர்வு முடிந்ததும் விடைகள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
தேர்வு முடிந்ததும் விடைகள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 10:39 AM

மதுரை:
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி முத்துலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் - 4 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., ஜன., 30ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பித்தோம். ஜூன் 9ல் எழுத்துத் தேர்வு நடந்தது.
ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்தான் இறுதி விடைகள், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. இதற்கு மூன்று ஆண்டுகளாகும். இதனால், தேர்வின் நோக்கம் நிறைவேறாது. தகுதியற்றவர்கள் தவறான முறையில் பணியில் நுழைய வாய்ப்புள்ளது.
இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வின் இறுதி முடிவு வெளியாவதற்கு முன், இறுதி விடைகளை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பிற பணிகளுக்கு தேர்வு நடத்தும் முகமைகள் பின்பற்றுவதைப் போல, தேர்வு முடிந்த பின் இறுதி விடைகளை டி.என்.பி.எஸ்.சி.,யும் வெளியிட வேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டார்.