UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 10:45 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் - 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும், உயர்கல்வி பயில கல்லுாரியில் சேர்க்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே உயர்கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நேற்று மாரத்தான் போட்டி நடந்தது.
செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.
இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த, ஆண் மற்றும் பெண்களுக்கு, பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

