தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி


UPDATED : செப் 09, 2026 01:08 PM

ADDED : செப் 09, 2026 01:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 01:08 PM ADDED : செப் 09, 2026 01:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருத்தணியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி நேற்று நடந்தது.

திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி, நேற்று நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்துாரபாண்டியன், சோபா ஆகியோர் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் உட்பட, பல்வேறு பயிற்சிகளை வழங்கினர்.

மேலும், பள்ளி மாணவ, மாணவியர் தங்களது கல்வித்திறன், விருப்பம் மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ற உயர்கல்வி படிப்புகளைத் தேர்வு செய்வதற்கு, ஆசிரியர்கள் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர்.

இது தவிர, மாணவ, மாணவியருக்கு பல்வேறு உயர்கல்வி படிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகள், கல்லுாரி சேர்க்கை நடைமுறைகள், உதவித்தொகைகள், கல்விக்கடன், போட்டித் தேர்வுகளுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குவது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த, 57 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us