தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கருத்தரங்கில் அதீத தகவல்கள் பரிமாற்றம்

அறிவியல் கருத்தரங்கில் அதீத தகவல்கள் பரிமாற்றம்

அறிவியல் கருத்தரங்கில் அதீத தகவல்கள் பரிமாற்றம்


UPDATED : செப் 09, 2026 01:07 PM

ADDED : செப் 09, 2026 01:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 01:07 PM ADDED : செப் 09, 2026 01:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா ஜெனிபர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

மனித குலத்தின் வரலாறு, அவர்களின் மரபணுவில் பொதிந்துள்ளது. கடந்த, 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'ஹோமோ சேப்பியன்' மனித இன எலும்பு கூடுகள் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோபாலில் வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மரபணுவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். ஆப்பிரிக்காவில் தான் மனித குலம் தோன்றியது. கடந்த, 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில், 14 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வாழ்ந்துள்ளனர்.

அவர்களில் ஒரு பிரிவினர் கால்நடையாகவும், படகு, மூலமாகவும்இடம் பெயர்ந்து, ஐரோப்பாவை அடைந்துள்ளனர். மற்றொரு பிரிவினர் இந்தியாவை அடைந்துள்ளனர்.

மனிதர்களின் மரபணுவை ஆராய்ந்த பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் மரபணு, தமிழ்நாட்டில் மதுரை உசிலம்பட்டி பகுதியில் வாழ்ந்து வரும் விருமாண்டி என்ற நபரின் மரபணுவோடு ஒத்து போவதை கண்டறிந்துள்ளனர்.

உலகின் அனைத்து மக்களுக்களுக்கும் உள்ள வேறுபாடு, தோலின் தடிமனின் அளவை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என அறிவியல் கூறுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியை கலைவாணி வரவேற்றார். ஆசிரியை நின்சி நன்றி கூறினர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us