ஜெர்மனியில் உயர்கல்வி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெர்மனியில் உயர்கல்வி: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : ஜன 05, 2026 05:03 PM
ADDED : ஜன 05, 2026 05:06 PM
மதுரை:
ஜெர்மனியில் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் மாட்டுத்தாவணி பிராட்மைண்ட் ஸ்டடி அப்ராட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் நடந்தது.
கல்வித்துறை சார்பில் மாலைமதி பங்கேற்று மாணவர்கள் உலகளாவிய கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊக்குவித்தார்.
ஜெர்மன் பல்கலை பிரதிநிதிகள் பங்கேற்பு
ஜெர்மன் பல்கலை பிரதிநிதிகள் உயர்நிலைப் பள்ளி முடித்த பின் தேர்வு செய்யக்கூடிய பாடப்பிரிவுகள், ஜெர்மனியில் உயர்கல்வி திட்டங்கள், உதவித் தொகைகள் பற்றி விளக்கம் அளித்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜெர்மனியின் ஐரோப்பிய அப்ளைடு சயின்சஸ் பல்கலை சர்வதேச வணிக மேம்பாட்டு பிராந்திய இயக்குநர் நரேந்திர ரெட்டி, பெர்லின் அர்டென் பல்கலை மூத்த வணிக மேம்பாட்டு மேலாளர் ஜெய்சன் டி க்ரூஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

