UPDATED : பிப் 23, 2026 03:39 PM
ADDED : பிப் 23, 2026 03:41 PM

சென்னை:
ஹிந்தி பிரசார சபா சார்பில், நேற்று நடந்த அடிப்படை ஹிந்தி தேர்வுகளில், தமிழகத்தைச் சேர்ந்த, 1.25 லட்சம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சென்னை, திருச்சியில், தக்ஷின பாரத ஹிந்தி பிரசார சபாக்கள் இயங்குகின்றன. எட்டு விதமான தேர்வுகளை, ஹிந்தி பிரசார சபா நடத்தி சான்றிதழ்களை வழங்குகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை ஹிந்தி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த 14, 15ம் தேதிகளில், பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்தாரத், பிரவீன் பூர்வார்த், பிரவீன் உத்தாரத் ஆகிய உயர்நிலை தேர்வுகள் நடந்தன. அதில், சென்னையைச் சேர்ந்த, 15,000 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 30,000 பேர் பங்கேற்றனர்.
நேற்று நடந்த பரிட்சயா, பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா தேர்வுகளில், தமிழகம் முழுதும், 1.25 லட்சம் பேர் பங்கேற்றனர்.
