UPDATED : செப் 21, 2026 04:39 PM
ADDED : செப் 21, 2026 04:46 PM
கோவை:
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் வித்யா, நவீன். 2 பீரங்கி படைப்பிரிவு தேசிய மாணவர் படையைச் சேர்ந்த இவர்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குனரகம் சார்பில் டில்லியில் நடந்த, அகில இந்திய தல் சைனிக் முகாம் 2026ல் பங்கேற்றனர்.
அங்கு அனைத்து இயக்குனரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. 17 தேசிய மாணவர் படை இயக்குனரகங்கள் பங்கேற்றன. சேவைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குனரகம் ஒட்டுமொத்த முதல் இடத்தைப் பெற்றது. இதில், வித்யா, நவீன் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
மாணவர்களின் சாதனையை கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் ஜெயா, என்.சி.சி., அலுவலர் லெப்டினன்ட் மனோஜ், ஆகியோர் பாராட்டினர்.
