சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாப்பிடுவது எப்படி? சுபான்ஷூ சுக்லா வெளியிட்ட வீடியோ வைரல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாப்பிடுவது எப்படி? சுபான்ஷூ சுக்லா வெளியிட்ட வீடியோ வைரல்
UPDATED : செப் 04, 2025 12:00 AM
ADDED : செப் 04, 2025 07:29 PM
புதுடில்லி:
விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் மற்றும் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் சுபான்ஷூ சுக்லா ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது எப்படி உணவு சாப்பிட்டேன் என்ற அனுபவத்தை சுபான்ஷூ சுக்லா வீடியோ வெளியிட்டு விளக்கி உள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக சுபான்ஷூ சுக்லா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. விண்வெளியில் சாப்பிடும்போது பழக்கவழக்கங்கள் ஏன் முக்கியம் என்பதை இங்கே விளக்குகிறேன்.
இது தொடர்பாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு குழப்பம் வரலாம். இது குறித்து வீடியோவில் விளக்கியுள்ளேன். விண்வெளியில் வேலை செய்வதற்கு தாரக மந்திரம் என்னவென்றால் பொறுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சுபான்ஷூ சுக்லா கூறியுள்ளார்.