எக்ஸல் கல்லுாரியில் தொழில்நுட்ப கல்விக்குழு ஐடியா ஆய்வகம் திறப்பு
எக்ஸல் கல்லுாரியில் தொழில்நுட்ப கல்விக்குழு ஐடியா ஆய்வகம் திறப்பு
UPDATED : ஏப் 12, 2026 11:21 AM
ADDED : ஏப் 12, 2026 11:23 AM
குமாரபாளையம்:
குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின், எக்ஸல் பொறியியல் கல்லூரி சார்பில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஐடியா ஆய்வக திறப்பு விழா நடந்தது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணை தலைவர் மதன் கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் பொம்மண்ணராஜா, தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், இயக்குனர்கள் அன்பு கருப்புசாமி, கார்த்திகேயினி, இயந்திர பொறியியல் துறை டீன் செந்தில்குமார், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை டீன் ஜீவானந்தம், கணினி அறிவியல் பொறியியல் துறை முனைவர் தமிழ்ச்செல்வன், இயந்திர பொறியியல் துறை பேராசிரியர்கள் வினோத், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் கலைச்செல்வி ஐயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, சிப்காட் திட்ட அலுவலர் மற்றும் உதவி செயல் பொறியாளர் சுஜா பிரியதர்ஷினி, ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வகத்தை திறந்து வைத்தார். மேலும், நித்ரா பயன்பாடுகள், இந்தியா நிறுவனம் மற்றும் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி கோகுல்நாதன், ஏ.ஐ.சி.டி.இ., 3டி பிரிண்டிங் பிரிவு ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
மேலும், மொபி டெக் ஒயர்லெஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தேவேந்திரன், ஏ.ஐ.சி.டி.இ., பி.சி.பி., பிரிவு ஆய்வகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் வினோத் மற்றும் இயந்திரப் பொறியியல் துறை டீன் ஆகியோர் வரவேற்றனர்.
