சமூக வலைதளங்களை விட்டு விலகினால் சாதிக்கலாம் பிளஸ் 2 முதல் மாணவி அறிவுரை
சமூக வலைதளங்களை விட்டு விலகினால் சாதிக்கலாம் பிளஸ் 2 முதல் மாணவி அறிவுரை
UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:50 AM

பட்டிவீரன்பட்டி:
சமூக வலைதளங்களை விட்டு விலகினால் சாதிக்கலாம் என பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தன்யஸ்ரீ கூறினார்.
பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தன்யஸ்ரீ பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தின் முதல் மாணவி என்ற சாதனை புரிந்துள்ளார். இம்மாணவியின் தந்தை மகேஸ்வரன் விவசாயி. தாய் பிரித்தா பிராண சிகிச்சையாளராக பணிபுரிந்து வருகிறார்.
தன்யஸ்ரீ தமிழ் 98, ஆங்கிலம் 96, இயற்பியல் 100, வேதியல் 100, கணிதம் 100, கணிப்பொறி அறிவியல் 100 பெற்றுள்ளார்.
மாணவி கூறியதாவது:
ஆசிரியர்கள்,பள்ளி முதல்வர் எனக்கு அளித்த பயிற்சி, ஊக்கமே அதிக மதிப்பெண் பெற உதவியது.
பள்ளியில் அன்றாடம் நடத்தும் பாடத்தை வீட்டிற்கு வந்தவுடன் படித்து விடுவேன். இந்த வெற்றிக்கு பெற்றோர் உதவியாக இருந்தனர். சமூக வலைதளங்களை விட்டு விலகி பாடங்களில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை பெறலாம் என்றார்.
இவரை ஹிந்து நாடார் உறவின்முறை சங்க செயலாளர் மோகன்குமார், பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, முதல்வர் ஆத்தியப்பன் ஆசிரியர்கள் பாராட்டினர் .