தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை தத்தெடுக்க ஐ.ஐ.டி., இயக்குநர் அறிவுரை

மாணவர்களை தத்தெடுக்க ஐ.ஐ.டி., இயக்குநர் அறிவுரை

மாணவர்களை தத்தெடுக்க ஐ.ஐ.டி., இயக்குநர் அறிவுரை


UPDATED : ஆக 11, 2026 04:22 PM

ADDED : ஆக 11, 2026 04:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 04:22 PM ADDED : ஆக 11, 2026 04:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:
“முன்னாள் மாணவர்கள், நிதியில்லாத கிராமப்புற மாணவர்கள் சிலரை தத்தெடுத்து வழிகாட்டியாக இருக்க வேண்டும்,” என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

இக்கல்லுாரியில் படித்த நான்கு மாணவர்கள், சென்னை ஐ.ஐ.டி.,யில் பணிபுரிகின்றனர். தற்போது பிளஸ் 2 முடித்து, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது, 30ல் இருந்து, 60 சதவீதமாக உயர்ந்துள்ளது .

வகுப்பறையில் அதிக மாணவர்கள் உள்ளதால், ஒவ்வொரு மாணவருக்கும் தனி கவனம் செலுத்த, முன்னாள் மாணவர் சங்கத்தினர், பேராசிரியர்களுக்கும், கல்வி நிறுவனத்துக்கும் உதவ வேண்டும்.

ஒவ்வொரு முன்னாள் மாணவரும், நிதியில்லாத கிராமப்புற மாணவர்கள் சிலரை தத்தெடுத்து, வழிகாட்டியாக இருந்து, சிறு உதவிகள் வழங்கி, அவர்கள் உயர்கல்வி கற்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us